மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

0
25

மத்திய அரசு சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலக்கூடிய குழந்தைகளுக்கு 2025- 26 நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

முதலில் https://scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில் நுட்ப முறையில் தங்களுடைய தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவராக கருதப்படுவர். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கப்படும்..

கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியம் ஒன்றாக உள்ளது. பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும்.

அதன் பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleவீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!