Egg 65: 4 முட்டை இருந்தா போதும்..!! ஈஸியா 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

0
137
egg 65

Egg 65: பிரியாணி வாங்கினால் நிச்சயம் இந்த சிக்கன் 65 இல்லாமல் பாதி நபர்கள் வாங்கி சாப்பிட மாட்டார்கள். அந்த வகையில் சிக்கனை பொறித்து கொடுக்கும் இந்த சிக்கன் 65 உணவு பிரியர்கள் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் வீட்டில் நாம் சிக்கன், மட்டன் வாங்கினால் இதுபோன்று 65 செய்து சாப்பிடலாம். சில சமயம் வீட்டில் சாம்பார், ரசம் என்று வைத்து பிறகு அதற்கு சைடிஸ் செய்ய குழப்பமாக இருந்தால் கட்டாயம் இந்த முட்டை 65 செய்து பாருங்கள். இதனை ஈவினிங் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதே சமயம் சிக்கன் 65 மாற்றாக இதனை அவர்களுக்கு கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் 

  • முட்டை – 4
  • சோளமாவு – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • 65 மசாலா – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -தேவையான அளவு
  • உப்பு – -தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் 4 முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து அதனை நன்றாக அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவில் ஒரு ஸ்டான் வைத்து அதில் முட்டை கலவையை வைத்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். இட்லி போல் வெந்தால் போதும்.

பிறகு அதனை எடுத்து சூடு ஆறியதும் ஒரு தட்டில் கொட்டி கேக் போன்று சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் கரம்மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சோளமாவு, மிளகாய் தூள், 65 மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டையை போட்டு கலந்துவிட வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான முட்டை 65 (muttai 65) தயார்.

மேலும் படிக்க:  நம்புங்க..! வெறும் 2 பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்..!