முட்டை இருந்தா போதும் சுவையான எக் லாலிபாப் செய்யலாம்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

Photo of author

By Priya

Egg lollipop: குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும். அது இனிப்பாக மற்றும் நிறைய பிளேவர்களில் கிடைக்கும். அதனை வாங்கி பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் முட்டையை வைத்து மிகவும் சுலபமான முறையில் முட்டை லாலிபாப் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை லாலிபாப் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என (muttai lollipop seivathu eppadi) பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • அவித்த முட்டை -10
  • பச்சை முட்டை – 2
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • பிரட் (அ) ரஸ்க் தூள் – 1/2கப்
  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம்மசாலா – 1 டீஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு துருவல் – 1ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் அவித்த முட்டையை காய்கறி துருவலில் வைத்து துருவி கொள்ள வேண்டும். பிறகு அதில் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, நறுக்கிய இஞ்சி பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு எடுத்து வைத்துள்ள இரண்டு பச்சை முட்டைகளை உடைத்து தனியாக ஒரு பவுலில் போட்டு கலக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றொரு பவுலில் ரஸ்க் தூள் அல்லது பிரட் தூள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது உருண்டையாக உருட்டி வைத்துள்ள முட்டையை அடித்து வைத்துள்ள முட்டை கலவையில் போட்டு பிரட்டி, பிறகு அதனை பிரட் தூளில் போட்டு பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து அதில் டூத் ஸிடிக் சாெருகி பரிமாறினால் சுவையான லாலிபாப் தயார்.

மேலும் படிக்க: இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை.. !!இந்த தோசை ட்ரை பண்ணி பாருங்க..!!