ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்!

Photo of author

By Sakthi

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்!

Sakthi

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இருந்து 11ம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலமாக இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நம் வீட்டில் இருக்கும் கிணறு ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அஜா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தான் இறந்த நாடு மனைவி மற்றும் மக்களை திரும்பப் பெற்று பல வருட காலங்கள் ஆட்சி செய்தான். ஆகவே நாமும் இந்த நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம், புரட்டாசி மாத ஏகாதசி என்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது அதில் மட்டும் கவனமாக இருங்கள்.