பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை மதிக்கும் அளவிற்கு கூட பெண்களுக்கு மரியாதை அளிப்பவர்களை மதிப்பதில்லை…! எல் முருகன் வேதனை…!

Photo of author

By Sakthi

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் சகோதரிகளை விரிவாக தரக்குறைவாக பேசிய திருமாவளவன் அவர்களை கண்டித்து பாரதிய ஜனதா சார்பாக மாநிலம் முழுவதும் மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

பெண்களைப் பற்றி தவறாக பேசியவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது.

ஆனால் ஆளுநர் வீட்டின் முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை அளிக்கின்றது.

பெண்களுக்கு எதிராக, அவதூறு பேசுபவர்களை கண்டிக்கும் வகையிலான, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, செல்லும் வழியிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவன் அவர்களை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் போலீசார் எங்கள் கட்சி நடத்தும் போராட்டத்தினை மற்றும் காவல்துறை ஏன்? தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது.

பெண்களை தவறாக பேசினால் தமிழகம் முழுவதும் விளம்பரம் தேடிக் கொள்ளலாம். என ஒரு சிலர் திட்டமிட்டு எதிர்க்கட்சிகளின் துணையோடு இந்த வன்முறைகளை செய்து வருகிறார்கள்.

அவர்களை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு எப்படி எல்லாம் நல்லது செய்து வந்தாரோ, அதே போல பிரதமர் மோடியும் இந்திய மக்களுக்கு நல்லதை செய்து வருகின்றார்.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கின்றது. கூட்டணிக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.