தமிழகத்தில் தொடங்கியது வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி! தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தேர்தல் ஆணையம்!

0
119

வாக்காளர் வரைவு பட்டியல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து நூத்தி எட்டு பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், இது சம்பந்தமாக செய்தியாளர்களும் தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது, சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து இணையதள வழி மூலமாகவும் மற்றும் நேரிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தது.

இதில் ஒன்பது லட்சத்து 48 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள், பெயர்களில் திருத்தம் மேற்கொள்ள 4 லட்சத்து 88 ஆயிரத்து 787 நபர்களும் பெயரை நீக்கம் செய்ய ஒரு லட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து 886 பேரும் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.

அதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்காக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கின்றது. அதன்படி தமிழ்நாட்டில் 80 வயதிற்கு மேலே 9 லட்சத்து 22 ஆயிரத்து 166 பேர் இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து இருக்கின்றார்.

Previous articleஇலக்கை சரியாக பயன்படுத்திய எம்பி! மக்கள் பாராட்டு!
Next articleஎதையுமே யோசிக்காத எடப்பாடி பழனிச்சாமி! ஸ்டாலின் சாடல்!