இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!

0
386
The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections
The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections

admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது.  ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார்.

அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், பாராளுமன்ற என இரண்டு தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை ஐகோர்ட் வழங்கி இருக்கிறது.

அதாவது, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக 2017 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக புகார்களை அளித்து வந்தார். அவரது மனுக்கள் விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் அதிமுக தொடர்பான வழக்குகளில் இபிஎஸ் அணி தரப்பினர்  கருத்தை ஆலோசனை செய்ய வேண்டும் மற்றும்  அதிமுக ஒருங்கிணைப்பு குழுவினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் பிறகு இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கூறியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அந்த வகையில் பார்த்தால் எடப்பாடி ஓபிஎஸ் அவர்களை அதிமுகவில் இணைக்க மாட்டார் என்பதால், இரட்டை இல்லை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Previous articleமக்களே உஷார்..புதிதாக பரவும் மர்ம நோய்!! 10 நாட்களுக்கும் 140 க்கும் மேற்பட்டோர் கொடூர சாவு!!
Next articleஆஷ் அண்ணா இனிமே நான் பாத்துக்குறேன்!! ப்ளேயிங் லெவனில் இனி இவருக்குத்தான் இடம்!!