அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ஜோ. பைடன்!

Photo of author

By Sakthi

அமெரிக்காவின் கடந்த மாதம் 3-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஓட்டு எண்ணிக்கையில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வந்த நிலையில், அடுத்த அதிபர் ஜோ பைடன் தான் என்று அந்த நாட்டின் எலக்ட்டோரல் காலேஜ் அமைப்பு அதிகாரபூர்வமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஆன நேற்றையதினம் அறிவித்திருக்கின்றது.

தேர்தல் வெற்றிக்கு தேவையான 270 இடங்களைத் தாண்டி 306 இடங்களை பைடன் பெற்று இருக்கின்றார் என்பதை அந்த அமைப்பு உறுதி செய்திருக்கின்றது. இதன் காரணமாக, முன்னாள் அதிபர் எழுப்பிய புகார்கள் அனைத்தும் தற்போது நீர்த்துப் போய் இருக்கின்றது.

அதிகாரப்பூர்வ முடிவுகள் வாஷிங்டன்னுக்கு அனுப்பப்பட்டு ஜனவரி மாதம் ஆறாம் நாள் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்திற்கு புதிய அதிபர் பைடன் தலைமை ஏற்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இருக்கின்ற பைடன் , மீண்டும் அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சி நம்முடைய அரசியல் அமைப்பு மற்றும் மக்களுடைய விருப்பம் போன்றவை மேலோங்கி இருக்கின்றன. எங்களுடைய ஜனநாயகம் ஒரு கட்டத்தில் பின்னோக்கி சென்றது, சோதனை செய்யப்பட்டது ,அச்சுறுத்தப்பட்டது , ஆனாலும் உண்மை வலிமையானது என இந்த சமயத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் அதிகாரம் என்பது அரசியல்வாதிகளால் எடுத்துக் கொள்ளப்படுவதாக இருக்காது. அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படுவதாக இருக்குமென்று டிரம்பை சாடும் விதமாக பைடன் தெரிவித்தார்.

எலெக்ட்ரல் காலேஜ் எனும் அமைப்பு அமெரிக்க அரசியல் சாசனத்தின் படி அதிபர், துணை அதிபர், தேர்தலை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கின்றது. 1787 ஆம் வருடத்திலிருந்து இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

சென்ற தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தெரிவித்த முன்னாள் அதிபர் சில வழக்குகளையும் தொடுத்திருந்தார் , ஆனாலும் டிரம்புக்கு பின்னடைவு தான் அதிகமாக இருந்தது எலக்ட்ரல் காலேஜ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக அமெரிக்க தேர்தல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றது.