இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!

Photo of author

By Sakthi

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!

Sakthi

Electric shock accident at railway station!! It is reported that 8 employees have died!!
இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிச்சித்பூர் இரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழிலாளர்கள் தன்பாத் இரயில் வழித்தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை அமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டது.
இந்த மின்சாரம் தாக்கப்பட்டதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் காயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஹௌரா – டெல்லி ரயில் பாதையில் தன்பாத் மற்றும் கோமோஹ் இடையே அமைந்துள்ள நிச்சித்பூர் இரயில்வே கேட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பல இரயில்கள் நிறுத்தப்பட்டன.