தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

Photo of author

By Sakthi

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் நேற்று(ஜூலை15) மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த வகையான நிறுவனங்களுக்கு எவ்வளவு ரூபாய் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தற்பொழுது உயர்ந்துள்ள மின்கட்டணம் குறித்தான விவரங்கள்…

* அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* இரயில்வே மற்றும் இராணுவ கட்டட குடியிருப்புகளுக்கும் மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* கிராமப் பஞ்சாயத்தில் உள்ள குடிசைகள் மற்றும் தாட்கோ நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 9.35 ரூபாயில் இருந்து 9.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* குடிசைத் தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6.95 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* விசைத்தறி நிறுவனங்களுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* வேளாண்மை மற்றும் அரசு விதைப் பண்ணை நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாயில் இருந்து 4.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* தொழில்துறை மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 8.70 ரூபாயில் இருந்து 9.10 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* அரசு கல்வி நிறுவனங்களுக்கும் மருத்தவமனைகளுக்கான மின்கட்டணம் 7.15 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* கட்டுமான பணிகளுக்கான மின்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 12.25 ரூபாயில் இருந்து 12.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.