ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்!
கொரோனா பரவுவதை தடுக்க முயற்சித்த மாநில, மத்திய அரசுகள் கொரோனாவிற்கான பல தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக பெரும்பான்மையாக பலர் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி விட்டாலும் கூட, சிலர் பயத்தின் காரணமாக அதை போடாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அப்படி அவர்கள் தடுப்பூசி போட்டால் மட்டுமே அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் மதுரை மண்டல தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்மூலம் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வும் எடுத்து கூறியுள்ளார். மின் வாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாலும், அனைவரும் அதை செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த சுற்றறிக்கை வெளியிடுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தற்போது தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி புதிய ஆணை ஒன்றை பிறப்பித்தது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் இதை உறுதி செய்வது அவசியம் என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக டாஸ்மாக் செல்லும் குடிமகன்களுக்கும் தடுப்பூசி என்பது கட்டாயம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் என்ற ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வரும் 7ஆம் தேதிக்குள் மின்சாரத் துறையில் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மின்சார வாரியம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஊழியர்கள் தடுப்பூசியை மறக்காமல் போட்டிருக்க வேண்டும் என்று மின்சார பொறியாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மின்சார வாரிய ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தாதோருக்கும் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் உமா தேவி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.