மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0
44

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி 20 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 10 முதல் 15 லட்சம் பேர் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஜூலை முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க மீண்டும் முகாம்கள் நடத்தப்படும், இதற்கான நிதி ஒதுக்கீடு பெற்ற உடன் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியானது..

ஆனால் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் சிலருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி வார்டு உறுப்பினர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். ஆனால் மற்ற அதிகார பதவிகளான கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது.

மேலும் அரசு மற்றும் கார்ப்பரேஷன் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், 3000 ரூபாய் பென்ஷன் போன்ற குறைந்த பென்ஷன் பெற்றாலும் இந்த உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது.

குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous articleமகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!
Next articleதிருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!