Elon Musk: எலான் மஸ்க் சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில வருடங்களாக முன்னணியில் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு தற்போது உயர்ந்து இருக்கிறது. இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தளம் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு அளித்து இருந்தார்.
பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார். இதனால் டிரம்ப் அரசு அதிகாரத்தில் இவருக்கும் பங்கு இருக்கிறது. மேலும், டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் உலக வரலாற்றில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தாண்டிய முதல் பணக்காரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.
எனவே, ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு தற்போது ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் எலான் மஸ்க் புதிய சொத்துக்களாக சுமார் 218 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்து இருக்கிறது. உலகின் முதல் பணக்காரர் இருக்கும் எலான் மஸ்க் அடுத்தபடியாக லாரன்ஸ் ஜோசப் எலிசன் இருக்கிறார்.
இவரின் சொத்து மதிப்பு சுமார் 234.9 பில்லியனாக இருக்கிறது. உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 ஆவது இடத்தல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.