தளபதி 66 திரைப்படத்திற்காக உருவாகி வரும் மெகா கூட்டணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
199

தளபதி 66 திரைப்படத்திற்காக உருவாகி வரும் மெகா கூட்டணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் இவர் தற்சமயம் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இவருடன் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட படபிடிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விஜய் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் அனைத்தையும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், பிரபலம் இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா! வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleஇந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here