அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

Photo of author

By Preethi

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

Preethi

Updated on:

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.அவ்வாறு மறுபரிசீலனை செய்ததில், இன்று அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்கி ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடமளித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.