திருமாவுக்கு வந்த புதிய சிக்கல்!! ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை!!

Photo of author

By Sakthi

திருமாவுக்கு வந்த புதிய சிக்கல்!! ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை!!

Sakthi

Enforcement Directorate raids places linked to Aadhav Arjuna

VCK:ஆதவ் அர்ஜுனா-வுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.

மார்ட்டின் அதிபர் மார்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில்  வியூகப்  பணியாற்றி வருகிறார். மேலும் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of common)  என்ற அமைப்பை தொடங்கி  அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை  ஒருங்கினைத்து திட்டமிட்டு நடத்தி வருகிறார்.

ஆதவ் அர்ஜுனா திமுக  தேர்தல்  பணிக்காக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனி உடன் Populous Empowerment Network நிறுவனத்தில் இணைத்து 2019 க் முதல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பணியாற்றி வந்தார். மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு கொடுத்துள்ளார். சமீபத்தில் விசிகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆதவ் அர்ஜுனாவை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக  திருமாவளவன் நியமித்தார்.திமுக மக்களவை கூட்டணியில் மக்களவை தேர்தலில் இவருக்கு தொகுதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனாக்கு சொந்தமான சென்னை மற்றும் கோவை முதலிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

அதாவது பாஜக அரசு எதிர் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை  குறி வைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எதிர் கட்சிகள் முன் வைக்கப்படுகிறது. திமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விசிக.

அக் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அரசியல் நோக்கமாகவே கருதப்படுகிறது.