குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Photo of author

By Hasini

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா ஹங்குட் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

இவரது மனைவி ஜோதி வயது 46, வருண் என்ற 20வயது மகன், கெளரி என்ற  16 வயது குழந்தை, நிஸ்சால் என்ற 13 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டு விட்டார். மேலும் அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டதன் காரணமாக, ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பிளேசர் கவுண்டி கோர்ட் அவருக்கு பரோல் அல்லாத ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து அவர் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார். கொரோனாவின் கடுமையான போராட்டம் எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது பார்த்தீர்களா? இந்த நிலைமை அனைவருக்கும் சீக்கிரம் மாற வேண்டும்.