சென்னையில் குடியிருப்பிலிருந்து குதித்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

Photo of author

By Sakthi

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வரும் சதாம்பார் 18 வயது நிரம்பிய இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காட்டாங்குளத்தூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் தகவலறிந்துவந்த காவல்த்துறையினர் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா? அல்லது உடன் படிக்கும் மாணவர்கள் யாராவது கீழே தள்ளி விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.