மதிமுகவை அட்டாக் செய்யும் இபிஎஸ்.. அப்செட்டில் வைகோ!! குஷியில் அதிமுக!!

0
235
EPS attacking Madhyamik.. Vaiko in upset!! AIADMK in Khushi!!
EPS attacking Madhyamik.. Vaiko in upset!! AIADMK in Khushi!!

MDMK ADMK: அடுத்த ஆண்டு நடைபெற போகும், சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளனைத்தும் முழு ஈடுபாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணமும், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணமும் நடைபெற்று வருகிறது. மேலும் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் இம்முறை நான்கு முனை போட்டியும் நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிளவுகள் நடைபெற்று வரும் சமயத்தில், இபிஎஸ் தவெக கூட்டணியை மட்டுமே தான் நம்பி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், விஜய்யும் கைவிரித்து விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த இபிஎஸ் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று யோசித்து வந்தார். ஆனால் இப்போது விஜய் கூட்டணிக்கு நோ சொல்லி விட்டால் என்ன மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்க்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது  என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளனர். அதில் முதலிடம் பிடிப்பது அதிமுக என்றே சொல்லலாம். இம்முறை அதிகளவு வாக்காளர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை வேறு கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது புதிதாக, மதிமுகவின் மாணவரணி துணை செயலாளர் சிவநாதன் அதிமுகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது. இது வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Previous articleதவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்ட பிளான்.. கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்!!
Next article“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை