
ADMK DMK: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இந்நிலையில் தான் கரூரில் யாரும் எதிர்பார்த்திராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் திமுக அரசு தான் என்று இஎபிஎஸ் தனது கடுமையான குற்ற சாட்டை முன்வைத்து வருகிறார்.
செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில், தவெகவின் செல்வாக்கை நிலைநாட்டலாம் என்ற நோக்கத்துடன் விஜய் கரூருக்கு சென்றார். ஆனால் அது அவருக்கே எதிர் வினையாக திரும்பி விட்டது. தற்போது புதிய திருப்பமாக, கரூர் முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டுமென்றால் நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும் என்று சென்னை
உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இப்பொழுது கரூரில் விஜய்யின் செல்வாக்கும், செந்தில் பாலாஜியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. இந்த நிலையை பயன்படுத்தி கொண்ட இபிஎஸ் கரூரில் அதிமுகவை நிலைநாட்டி, செந்தில் பாலாஜியின் கோட்டை என்று அறியப்படும் பெயரை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்படும் இபிஎஸ்யின் இந்த திட்டம் பலிக்குமா என்பதையும், கரூர் மக்கள் அதிமுகவை ஆதரிப்பார்களா இல்லை எதிர்பார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.