ADMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா திமுகவின் மூத்த தலைவராக இருந்து, செல்வாக்கு பெற்று மக்கள் மத்தியில் நிலைத்திருந்த செங்கோட்டையனை இபிஎஸ் பதவியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்சியின் உள்விவகரங்களை பொது வெளியில் பேசியதால் பதவி நிக்கம் செய்யப்பட்டதாக இபிஎஸ் தரப்பு கூறியது. செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கிய சில நாட்களிலேயே, இபிஎஸ் ஈரோடுக்கு சென்றார். அப்போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தை அக்டோபர் 10 ஆம் தேதி ஈரோட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் இபிஎஸ்.
இது செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் சமயத்தில், இபிஎஸ்யின் இந்த பிரச்சாரம் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியதால், அப்பகுதி மக்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர் என்றும், அதிமுகவிற்கு எங்களது ஆதரவு இல்லை என்றும் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரச்சாரத்திற்கு செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கபடாததால் ஈரோடு மக்கள் விரக்தியில் உள்ளனர்.
இபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், செங்கோட்டையன் இல்லாமல் ஈரோடு தொகுதியை கைப்பற்ற முடியாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பிடிவாத குணம் அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.