ADMK TVK BJP: கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு விலகி விட்டார். இபிஎஸ்யும் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்ட வட்டமாக கூறி விட்டார்.
இதனை தொடர்ந்து கரூரில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக விஜய்க்கு உதவி வருகிறது. நீங்கள் கூட்டணிக்கு மட்டும் வாருங்கள், இந்த பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அமித்ஷா, விஜய்யிடம் கூறியதாக தகவல் வந்தது. தற்போது பாஜக விஜய்க்கு பக்கபலமாக இருப்பது இபிஎஸ்க்கு பெரும் சவாலாக உள்ளது. பிரிந்தவர்களை மீண்டும் இணைக்காமல் இருப்பதற்கான காரணம் இபிஎஸ்யின் தலைமை பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் தான் என்று பலரும் கூறி வந்தனர்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவிற்கு மாற்றாக தற்போது விஜய்யை களமிறக்கியுள்ளது பாஜக. ஏற்கனவே அதிமுகவிடம் பாஜக அதிக தொகுதிகள் கேட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு வழங்க வேண்டுமென பாஜக இபிஎஸ்யிடம் வலியுறுத்தியதாக தகவல் பரவியுள்ளது. விஜய்யின் வருகையால் பாஜகவில் இபிஎஸ்யின் பலம் குறைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.