ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சுமார் 1 வருடத்திற்கு முன்பிருந்தே கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்றுப்பயணத்தையும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளும், கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது தான் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு.
விஜய் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் அதிமுக உடன் தான் கூட்டணி வைப்பார் என்று இபிஎஸ் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அண்மையில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த வதந்திக்கு தவெக தலைவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் காரணமாக ஏமாற்றமடைந்த இபிஎஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயத்தில் விஜய்யிடம் ஒரு நிபந்தனையை முன் வைத்துள்ளாராம்.
அது என்னவென்றால், விஜய் முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், இதனை சரி பாதியாக பிரித்து கொள்ளலாம் என்று இபிஎஸ் கூறியுள்ளாராம். அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் நீங்களும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நானும் முதல்வர் பதவியை பிரித்து கொள்ளலாம் என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தபடாத நிலையில், இந்த நிபந்தனைக்கு விஜய் சம்மதம் தெரிவித்து விட்டால், தமிழக அரசியல் களம் புதிய திருப்பத்தை சந்திக்கும் என்பது தெளிவாகிறது.

