ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி தான் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுகவை எதிர்க்க நாதக, தவெக போன்ற கட்சிகள் உதியமாகி விட்டன.
இந்நிலையில் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் பணியை திராவிட கட்சிகள் முன்னெடுத்து வரும் நிலையில், அதில் முதலிடம் பிடிப்பது திமுக என்று கூறும் அளவிற்கு, அந்த கட்சியில் தொண்டர்கள் இணைந்தனர். இவ்வாறான நிலையில் தவெகவிலும் இது அரங்கேறியது. தொண்டர்களை தவிர்த்து முக்கிய முகங்களை விஜய் தட்டி தூக்கினார். செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், போன்ற முக்கிய நிர்வாகிகளின் இணைவு தவெகவிற்கு பலத்தையும், திராவிட கட்சிகளுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாற்று கட்சியினர் இணைவும் நிகழ்வு அதிமுகவில் மட்டும் தான் குறைந்தளவு இருந்தது. ஆனால் தற்போது, திமுக, தவெகவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். திமுகவின் முன்னாள் நகர செயலாளர் நவாப் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் ஆகிய 100 க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவரின் இந்த சேர்க்கை அதிமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.