ஈரோடு அருகே வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்! 2 பேர் பரிதாப பலி!

Photo of author

By Sakthi

தற்சமயம் நாடு முழுவதும் பல இடங்களில் விபத்துக்கள் திடீர், திடீரென்று நடந்த வண்ணமிருக்கின்றன.

இதற்குக் காரணம் காவல்துறையா? அல்லது வாகன ஓட்டுநர்களா? அல்லது சாலையை சரிவர பராமரிக்காதவர்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறை தந்தபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது

. இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்த நபர்கள் இருவரும் சூளகிரி பகுதியை சார்ந்த இளைஞர்களான வருண் மற்றும் அஜித் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.