2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நோய்த்தொற்றை விரட்டியடித்த மாவட்டம்!

Photo of author

By Sakthi

கடந்த 3 வருட காலமாக நோய்த்தொற்று பரவல் இந்தியா முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இருந்தாலும் அந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது மெல்ல, மெல்ல, இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது அதுவும் தமிழகத்தில் மிக விரைவாக இந்த நோய்த் தொற்று பரவல் குறைந்து வருகிறது.

கடந்த 2020 ஆம் வருடம் ஈரோடு மாவட்டத்தில் மார்ச் மாதம் 22ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு முதன் முதலாக நோய்த்தொற்று பரவல் கண்டறியப்பட்டது.

அதன்பிறகு அவர்கள் மூலமாக அந்த இருவருக்கும் நெருக்கமாக தொடர்பிலிருப்பவர்களுக்கு பரவத்தொடங்கியது. இதனை அடுத்து அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து கொண்டே வந்தது.

அதன்பிறகு தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தபட்டதால் பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனாலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணை நோய் இருப்பவர்கள் சிகிச்சை பலனின்றி பலர் பலியாகியிருந்தார்கள் இந்த சூழ்நிலையில், ஒரு மாற்றம் பெற்ற ஒமைக்ரான் வைரஸ் அந்த மாவட்டத்தில் 3ம் அலையாக பரவத்தொடங்கியது.

தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தது. நோய்த் தொற்றின் 3வது அலையில் தினசரி நோய் தொற்று பாதிப்பு ஆயிரத்து 400 வரை பதிவாகியிருந்தது. அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, கடந்த இரண்டு வார காலமாக மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு குறைய ஆரம்பித்தது.

இந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு நேற்றையதினம் அந்த மாவட்டத்தில் தினசரி நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படவில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்சமயம் அந்த மாவட்டம் முழுவதும் தினமும் ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை சுகாதாரத்துறை காரணமாக, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற பட்டியலினடிப்படையில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 0மாக அந்த மாவட்டத்தில் பதிவாகியிருக்கிறது. இதுவரையில் அந்த மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,32,660 என்று பதிவாகியிருக்கிறது.

இந்த நோய் போன்ற பாதிப்பிலிருந்து இது வரையில் 5 பேர் குணமடைந்து வீடு கொண்டிருக்கிறார்கள் இதுவரையில் உலகம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,906 என்று பதிவாகியிருக்கிறது. இதுவரையில் 734 பேர் பலியாகியிருக்கிறார்கள். தற்சமயம் அந்த மாவட்டம் முழுவதும் 20 பேர் நோய்தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.