Breaking News, Politics, State

விஜய் பரப்புரைக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஈரோடு.. 18 ஆம் தேதி நடக்க போகும் தவெக திருவிழா!!

Photo of author

By Madhu

TVK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், இதனை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவரின் இந்த கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது. அந்த அளவிற்கு தவெக மக்களின்  ஆதரவை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 இடங்களில் பிரச்சார பயணத்தையும் செய்து முடித்தார். ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சுமார் 1 மாத காலமாக வெளியில் தலை காட்டாமல் இருந்த, விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தவெக மீண்டும் உயிர் பெற்றுவிட்டது என்பதை நிரூபித்தார். இவ்வாறான நிலையில் விஜய்க்கு மக்களை சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்க, நிபந்தனைகளும் அதிளவில் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய தவெக, அடுத்ததாக ஈரோட்டில் மக்களை சந்திக்க அனுமதி கோரியிருந்தது. அதற்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், இறுதியில் 18 ஆம் தேதி தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையில் ஏராளமான திருப்பங்கள் நிகழும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஈரோடு பிரச்சாரத்தில் மக்கள் முன்னிலையில் தவெகவில் இணைவார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

நயினாரிடம் அமித்ஷா கொடுத்த அசைமெண்ட்.. அப்பா-மகன் சேரவேண்டியது உங்க பொறுப்பு!!