முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

Photo of author

By Janani

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

Janani

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.

நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் கதி என்று கிடக்கிறேன், ஆனால் சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டே தான் இருக்கிறது எந்த ஒரு முடிவும் கிடைக்கு வில்லை” என்று புலம்புபவர்களும் உள்ளனர்.

முருகனுக்கே ஒரு காலத்தில் சோதனைகள் வந்ததால்தான் கோபித்துக் கொண்டு பழனிக்கு சென்றார். அப்படி இருக்கையில் முருகனுடைய பக்தர்களாகிய நமக்கும் பல சோதனைகளை கொடுத்து தான் உயர்வுக்கு கொண்டு வருவார். உங்களுடைய சோதனைகள் மற்றும் வேதனைகளை, சாதனைகளாக மாற்றும் பொறுப்பு அப்பன் முருகருக்கு உண்டு.

உங்களுடைய ராசி கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் முருகருக்கு பெயர் கொடுக்கும். அந்த முருகரை நீங்கள் வணங்கும் பொழுது உங்களுடைய வாழ்க்கை வளமாகும். எல்லோரும் எல்லா முருகரையும் கும்பிடலாம். ஆனால் உங்களுடைய கட்டத்தில் இந்த முருகருக்கு என ஒரு கட்டம் ஒதுக்கி இருக்கும். அந்த முருகரை வணங்கும் பொழுது சுபிட்சம் உண்டாகும்.

அதாவது உங்களுடைய கட்டத்தில் செவ்வாயும் சனியும் சேரும் பொழுது சுப்பிரமணி, செவ்வாய் குரு செந்தில் ஆண்டவர், செவ்வாய் சுக்கிரன் பாலசுப்பிரமணியன் இது போன்று கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இவ்வாறு ஒவ்வொருவருடைய கட்டத்திலும் இருக்கக்கூடிய கிரகங்களை அடிப்படையாக வைத்து, அவரவருக்கு உரிய முருகரை வணங்கும் பொழுது நல்ல பலன்கள் கிடைக்கும்.

எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்கலாம். ஆனால் அவரவர் ஜாதக கட்டத்தில் இருக்கும் முருகரை வழிபடும் பொழுது கிடைக்கக்கூடிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். இப்பொழுது ஒவ்வொரு ராசிக்கும் எந்த முருகக் கடவுளை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.

1. மேஷம்- பழனி ஆண்டவர்
2. ரிஷபம்-பழமுதிர்ச்சோலை
3. மிதுனம்-வயலூர் முருகன்
4. கடகம்-திருச்செந்தூர்
5. சிம்மம்-ராஜ அலங்கார முருகன்
6. கன்னி-திருத்தணி
7. துலாம்- மருதமலை
8. விருச்சிகம்-எட்டுக்குடி முருகன்
9. தனுசு-கோயம்புத்தூர் அனுபாவி முருகன்
10. மகரம்-அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருக்கும் சுப்பிரமணியன்
11. கும்பம்- சுவாமிமலை
12. மீனம்-திருச்செந்தூர்

எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வழிபடலாம். ஆனால் ஒவ்வொரு ராசிக்கும் உரிய முருகரை வழிபடும் பொழுது நிச்சயமாக முருகனின் அருளை பெற முடியும்.

இதேபோன்று குருதிசை நடக்கும்பொழுது சுவாமிமலைக்குச் சென்று முருகரை வழிபடலாம்.உங்கள் வீட்டில் யாருக்கேனும் முருகனின் அம்சம் கொண்ட பெயர் இருக்கிறது என்றால் நீங்களும் ஒரு பாக்கியசாலி தான். தினமும் மாலை 6:30 மணி அளவில் முருகனின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய விளக்கினை ஏற்றி வைத்து, மனதார அவரை வணங்கும் பொழுது சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொடுப்பார்.

அப்பன் முருகனை அனுதினமும் நினைத்து வழிபடும் பொழுது, கஷ்டங்கள் பல வந்தாலும் இறுதியில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்வார். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கல்கள், கடன் தொல்லைகள் இதுபோன்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முருகனுக்காக காவடி எடுத்து பாத யாத்திரை செல்லும் பொழுது அனைத்து பிரச்சனைகளும் தூள் தூளாக சிதறிவிடும்.

இறுதியாக அந்த காவடியை முருகனின் பாதத்தில் சமர்ப்பிக்கும் பொழுது, உங்களுடைய அனைத்து பாரத்தையும் அந்த முருகனின் பாதத்தில் சமர்ப்பித்ததற்கு சமமாக கருதப்படும். குபேரனின் வசிய நிறமான பச்சை நிற வஸ்திரத்துடன் முருகனை சென்று காணும் பொழுது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.