பிரபல கான் நடிகர் வீட்டில் நடந்த நிகழ்வு! பதிவிட்ட சில நிமிடங்களில் ரசிகர்கள் செய்த செயல்!

Photo of author

By Hasini

பிரபல கான் நடிகர் வீட்டில் நடந்த நிகழ்வு! பதிவிட்ட சில நிமிடங்களில் ரசிகர்கள் செய்த செயல்!

விநாயகர் சதுர்த்தியை நாம் அனைவருமே நம்மால் முடிந்தவாறும், வசதிக்கேற்றவாறும் கொண்டாடி வருகிறோம். இது வருடாவருடம் நாம் செய்யும் ஒரு முக்கிய நிகழ்வு. இந்நிலையில் இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாருக்கானும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பூஜைகள் செய்து வணங்கி உள்ளார்.

இந்நிலையில் விநாயகருக்கு நேற்று இரவு அவர் விடை கொடுத்ததோடு, இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் அடுத்த ஆண்டு விநாயகக் கடவுளை காணும் வரை அவரது ஆசிகள் நம் அனைவரிடமும் தொடர்ந்து இருக்கும் என்றும், கணபதி பாபா மோரியா என்றும் தெரிவித்திருந்தார். இந்த பதிவு வெளியான ஒரு சில நிமிடங்களில் எல்லாம் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி தெளித்து திணறடித்து இருந்தனர்.

இதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இளைய மகன் ஆபிராம் கான் விநாயகரை வணங்கும் புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். மதச்சார்பற்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார் என ஷாருக்கானை சிலர் பாராட்டினார்கள். எனினும் ஒரு சில நபர்கள் ஒரு முஸ்லிம் என்ற வகையில் இது ஒரு பாவச் செயல் என்றும் அவரை வசை பாடினார்கள்.

ஆனால் அவரோ இது போன்ற நெகட்டிவ் பதிவுகளை கண்டுகொள்ளாமல், அதன் பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று ஒவ்வொரு வருடமும் தனது வீட்டில் விநாயகரை வைத்து வரவேற்கும் மரபை கடைபிடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்குமே பெருமைக்குரிய விஷயம் தான்.