நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!!

0
276
Everyone will get justice in the country!! New Law Minister Interview!!
Everyone will get justice in the country!! New Law Minister Interview!!
நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!!
இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேவால் அவர்கள் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இன்று இலாக்காக்கள் மற்றப்பட்டு அமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜூஜூ அவர்களை புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள அர்ஜூன் ராம் மேவால் அவர்கள் ஏற்கனவே கலாச்சாரம் மற்றும் பார்லி விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். சட்டத்துறை அமைச்சராக பதவியேற்ற அர்ஜூன் ராம் மேவால் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.
சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அர்ஜூன் ராம் மேவால் அவர்களிடம் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களையும் கூறினார். இவருக்கு சக தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சராக பதவியேற்ற அர்ஜூன் ராம் மேவால் அவர்கள் “மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். நிர்வாகத்துறைக்கும் நீதித்துறைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” என்று கூறினார்.
Previous articleகிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படம்!! ஹீரோவாக ஜெயம் ரவி!!
Next articleகுஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!!