By-election in Erode: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார், எனவே மீண்டும் ஈரோடில் இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேரா. இந்நிலையில் அவர் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் மறைந்த திருமகன் ஈவேரா தந்தை ஆவார். இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் பிரச்சாரக் கூட்டங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஆடு, மாடுகள் போல அடித்து மூன்று வேளையும் உணவு வழங்கி, மாலை வீட்டிற்கு அனுப்பும் போது 500 ரூபாய் படம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு எதிர்கட்சியினர் ஈரோடு பார்முலா என்றும் பட்டி பார்முலா என்று அழைத்தனர். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நவம்பர் 11ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை மேலும் மோசமாகி உயிரிழந்தார். இவரின் இறப்பு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகி வருகிறது.