ஷூட்டிங்கில் செட்டை பார்த்து பயந்த முன்னாள் நடிகை! இங்கேயா என அதிர்ச்சி?
அந்த காலத்தில் எல்லாம் பேய் படங்கள் என்றால் பிள்ளைகள் அலறி போய் விடுவார்கள். ஆனால் தற்போது வரும் பேய் படங்கள் வாண்டுகள் ரசித்து பார்க்கும் வண்ணம் நகைச்சுவையாகவும், கலப்பாகவும் படம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பிள்ளைகள் பழக முக்கிய நபர் மற்றும் நடிகரான லாரன்ஸ் மாஸ்டர் ஆகும்.
முதலில் இவர் நடன இயக்குனர் ஆக இருந்தாலும் சில படங்களில் நடித்ததும் மக்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தார். அவரது கதையில் வரும் பேய்கள் எல்லாம் மிகவும் பாவமாக இருக்கும். அப்படி மக்கள் மனதில் எண்ணத்தை விதைத்து இவர் படங்கள் என்றால் தியேட்டருக்கு மக்கள் வரும் வண்ணம் செய்துள்ளார்.
மேலும் இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் யாரும் பயப்படுவதில்லை. மாறாக வயிறு குலுங்கவும், வலிக்கவும் சிரிக்கிறார்கள். அதற்கு காரணமான லாரன்ஸ் திகிலும் நகைச்சுவையும் சரிசமமாக கலந்து கொடுத்து கொண்டிருக்கும் நாட்டு வைத்தியராக மாறியுள்ளார். பேய் படங்களை பார்த்து பயந்து நடுங்கியது எல்லாம் அந்தக் காலமாக மாறிவிட்டது.
தற்போது லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அமாவாசை அன்று இரவில் ஒரு சுடுகாட்டில் நடந்தது. லாரன்ஸ் நடிக்கும் காட்சிகளை அங்கு அரங்கேற்றி, படமாக்கி, டைரக்டர் கதிரேசன் இயக்கிக் கொண்டிருந்தார். எப்போதும் லாரன்ஸ் அம்மாவாக கோவை சரளாதான் நடிப்பார். ஆனால் இந்த படத்தில் சில காரணங்களால் அவர் நடிக்க வில்லை.
மேலும் அம்மா வேடத்துக்கு ஒரு முன்னாள் கதாநாயகி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவர் இரவு 8 மணிக்கு அவரது கால்ஷீட் என்று சொல்லப் பட்டது. சரியான நேரத்துக்கு அவருடைய கார் சுடுகாட்டுக்கு வந்தது. காரை விட்டு இறங்கிய அவர் கல்லறைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கேயா? ஷூட்டிங் விடிய விடிய இங்கேதானா? என சுடுகாட்டில் நடிக்க பயந்தாராம்.
எனவே மறுநாள் சுடுகாடு போல ஒரு செட்டை போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அமாவாசை இருட்டு இல்லாமல் பூரண நிலவு வெளிச்சமாக இருந்திருந்தால் அந்த முன்னாள் நாயகி பயமின்றி நடத்தியிருப்பாரோ? என அந்த இடத்தில் இருந்தவர்கள் யோசித்தனர்.