ADMK TVK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும், வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் மட்டும் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளும், பல அணிகளும் உருவாகி வருவது அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
இவர் நேற்று தமிழகம் வந்த செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சென்னை வந்த இவர், எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும், பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்தும் கலந்துரையாடி இருக்கிறார். அதிலும் முக்கியமாக அதிமுக ஒருங்கிணைப்பது பற்றி நீண்ட நேரம் இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், ஓபிஎஸ்யை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறான நிலையில் 24 ஆம் தேதியான இன்று தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கையை அறிவிக்கப் போவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.
அந்த வகையில், இன்று ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிலும் மிக முக்கியமாக ஓபிஎஸ்யை சேர்க்க முடியாது என்று என்று எடப்பாடி கூறியதால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் இன்னும் சில முக்கிய முகங்கள் தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று கூறிய நிலையில், ஓபிஎஸ்யின் சேர்க்கை அதற்கு தொடக்க புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.