முன்னாள் நிதி அமைச்சரை எதிர்த்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கம்! விளக்கமளிக்க நோட்டீஸ்!

0
268
Ex-minister fired for speaking out against finance minister Notice to explain!
Ex-minister fired for speaking out against finance minister Notice to explain!

முன்னாள் நிதி அமைச்சரை எதிர்த்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கம்! விளக்கமளிக்க நோட்டீஸ்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கூட்டத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக அவரை அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு கட்சியில் நிலவும் குறைகள் குறித்து ப.சிதம்பரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் எதிரொலியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப் பட்டதுடன், விளக்கம் கேட்டு அவருக்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குறைகள் குறித்து பேசியதன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கட்சி கூட்டத்தில் என்ன பேசுவது, எதை பற்றி பேசுவது. கட்சியில் நிலவும் குறைகளை சுட்டி தானே காட்ட வேண்டும்.அதுவும் கட்சி கூட்டத்தில்.

Previous article15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!
Next articleவீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here