முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?

0
182

தமிழக முன்னாள்
முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணை மேடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.இவர் தமிழகத்தின் முதல்வர்களான எம்ஜிஆர்,கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து உள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் செட்டிலாகிவிட்டார்.தற்போது அவருக்கு 67 வயது ஆகும் நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தார் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.பின்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அவர் சடலமாக கிடந்துள்ளார்.இவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதோ காரணமா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் சுமார் 37 வருடங்களுக்கு மேலாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் டிரைவராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉங்கள் குழந்தைகளுக்கு ‘ழ’கரத்தைக் கற்றுக் கொடுக்க இதோ ஒரு இனிமையான வழி!
Next articleமும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!