ப்பா சீர் வரிசையே இவ்வளவா! வாயைப் பிளந்த மக்கள்!

Photo of author

By Sakthi

2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை தந்து அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை மாவட்டத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார்.

ஒரு பெண்ணை பெற்று வளர்த்து அதை திருமணம் செய்து கொடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் இம்சைகள் படுவார்கள், அதை சொல்லி மாளாது.

புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது அந்த பெண் பிள்ளைக்காக சேமித்து வைத்ததை எல்லாம் விற்கும் நிலைக்கு வந்த திருமணமும் இருக்கின்றது.

ஆனாலும் மதுரையில் தன்னுடைய மக்களுக்காக 2 கோடி ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை செய்து தந்து ஒரு தகப்பனார் அசத்தி இருக்கின்றார் கடந்த இரு தினங்களாக இணையத்தில் இந்த சீர்வரிசை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவைதான், வைரலாகி வந்தது.

அந்த சீர்வரிசை செய்யும் புகைப்படங்களையும் பார்த்தாலே தலை சுற்றும் அளவிற்கு ஏராளமான பாத்திரங்கள் அதிலும் தங்கம் முதல் சில்வர் தட்டுகள் வரையிலும் கார்கள் முதல் ஆடி வரை ஏராளமான பொருட்கள் இருந்தன.

இதுபற்றிய போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது அந்த வீட்டு திருமணம் எங்கே நடந்தது என்பது குறித்து தெரிய வந்திருக்கின்றது.

மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசுவின் மகள் உடையவர் திருமணத்திற்காக தான் இந்த சீர்வரிசை கொடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிய வந்திருக்கின்றது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும் கொடிமங்கலம் பகுதியில் இருக்கின்ற விபி வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 4ஆம் தேதி அன்று நாகமலை புதுக்கோட்டை பகுதியில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்காக கார்கள் டிராக்டர் வீட்டுப்பொருட்கள் , அதோடு ஆடுகள் போன்றவையும் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.

இந்த சீர்வரிசைகள் திருமணம் நடைபெற்ற மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்து போயின.

அனேக சீர்வரிசைகள் வைக்கவே ஒரு வீடு போதாது என்ற நிலையில், அந்த சீர்வரிசை இருந்தது இதனுடைய மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த சமூக வலைதள வாசிகள் வாயடைத்துப்போய் நிற்கின்றார்கள்.