2026 தேர்தலுக்காக அதிமுக தனது கட்சியை பலப்படுத்தி வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் ஆரணி மற்றும் போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பதவியில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அவர்களின் பெயர்களையும் அதிமுக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்து வருகின்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணனுக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவித்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி மறைந்த தீவிர விவசாய இவருக்கு பதவி வழங்கப்பட்ட செய்தி அதிமுகவினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் காலமான முத்துகிருஷ்ணனுக்கு கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டு பகுதியில் உள்ள முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி போடாமல் இறந்தவருக்கு பதவி வழங்கியது ஏன் என கேள்வி எழுந்து வருகின்றது.