NTK-TVK:நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
தமிழகத்தில் நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது முதல் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. அதாவது தவெக கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும் திமுக அரசை வன்மையாக கண்டித்தார். இதனால் திமுக எதிர்ப்பு கட்சிகள் விஜயின் தவெக கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என்று எதிர் பார்த்து வருகிறார்.
மேலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பல கட்சிகளில் இருந்து விலகி விஜயின் தவெக கட்சியில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இருந்து நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். மேலும் மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம் அவருடன் சேர்ந்து 40 உறுப்பினர்கள் விலகினார்கள். இவர் சீமானின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
இவரே கட்சியில் இருந்து விலகி இருப்பது நாம் தமிழர் கட்சியினர் இடியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாகை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விலகினார்கள் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளியானது. மேலும் நாம் தமிழர் கட்சிக்கு உட்கட்சி பிரச்சனைகள் நடந்து வருகிறது. அதே போல் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகினார்.
இது போன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செய்தி ஆகும்.