இந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!

Photo of author

By Sakthi

பாஜக சார்பாக விழுப்புரத்தில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. அந்த சமயம் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, தமிழ்நாட்டில் இருக்கிற இந்து விரோத தீயசக்திகள் திமுக, மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கம்யூனிஸ்ட், கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும், களைந்து எடுப்பதற்காகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த யாத்திரை என்று தெரிவித்தார்.

இந்து பெண்களை எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்தார் திருமாவளவன். அவரை தமிழக அரசு இன்று வரை கைது செய்யவில்லை எனவே மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இந்த யாத்திரை என்று தெரிவித்தார்.

முக அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். ஆலோசனை செய்து அவர் நல்ல முடிவை அறிவிப்பார். தீயசக்தி திமுகவை அழிக்க ஒரு நல்ல முடிவினை மேற்கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.