தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

Photo of author

By Pavithra

தமிழக அரசால் நடைமுறைப்படுத்திய இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்!!

தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தினால் ஏற்படும் சில குளறுபடிகள் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கைரேகை மூலம் நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டையில் உள்ளவர்களின் பெயர்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால் கைரேகை,சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் குடும்ப உறுப்பினர் அல்லாத எவரும் குடும்ப அட்டையை கொண்டு சென்று நியாய விலை பொருட்கள் வாங்க முடியாது.இதனால் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தான் நியாயவிலை கடைகளுக்கு நேரில் சென்று கைரேகையை பதிவு செய்த பின்னரே அவர்களுக்கு நியாய விலை பொருட்கள் வழங்கிவருகிறது.ஆனால் சிலரின் கைரேகை ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாமல் இருப்பதினால் பொருட்கள் வழங்குவதில் சற்று இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு கைரேகை ஒத்துப் போகாத பட்சத்தில்,ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ஓடிபி அனுப்பப்படும்.அந்த ஓடிபி-யை பயன்படுத்தி உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் டெக்னிக்கல் குறைபாடு காரணமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஓடிபி சரியாக சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால்,இணையதளத்தின் வேகம் மிக குறைவாக இருப்பதினால் சர்வரில் இருந்து தகவல்கள் பெறுவதற்கு கால தாமதமாகின்றது.இதனால் மேலே கூறிய இந்த நடைமுறைகளை பயன்படுத்தி மக்களுக்கு நியாய விலை பொருட்கள் விநியோகிப்பதில்
காலதாமதமாகின்றன.இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.இந்த நியாய விலை பொருட்களுக்காக மக்கள் தங்களது ஒரு நாள் பணிகளை விட்டுவிட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்சனை தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கடந்த சில நாட்களாகவே நீடித்து வருகின்றது.

குறிப்பாக சென்னை கோவை தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொருட்கள் வாங்க காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுமட்டுமின்றி சர்வர் பிரச்சனையின் காரணமாக நியாய விலை பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைகின்றது என்று நியாய விலை கடை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் தமிழக அரசு நடைமுறைப்படுத்திய இந்த பயோமெட்ரிக் திட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளை விரைவில் நீக்க வேண்டும் என்று நியாய விலை கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.