கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு !!

0
138

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர்.அதில் 87 ஆயிரம் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளது. இதில் சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனால் மிதமான இடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை புதியதாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும்,அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடித்து ,ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் விரைவில் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous articleகுரூப் – 2 உள்பட 7 துறைகளின் நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!! TNPSC
Next articleஆர்யா எனக்கு தான் புருஷன்! உரிமையோடு பெயரை சேர்த்துக் கொண்ட அபர்ணதி!