Breaking News, State

ஆயுர்வேத படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! இணையத்தில் வெளிவந்த முக்கிய தகவல்!!

Photo of author

By Jeevitha

ஆயுர்வேத படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! இணையத்தில் வெளிவந்த முக்கிய தகவல்!!

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள்.

தற்போது தமிழகத்தில் மருத்தவ மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள அவர்களின் விருப்பத்திற்கு மேல்படிப்பில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள்.

மேலும் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருந்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவர் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி என தமிழகம் முழுவதும் 5 ஆரசு கல்லூரிகள் உள்ளது.

இந்த நிலையில் யோக மற்றும் இயற்கை மருத்துவப் படிபிற்கு சேர்க்கை நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. இந்த படிப்பிற்கு ஜூலை 30 ஆமா தேதி முதல் விண்ணபிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 25  ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து அரும்பாக்கம் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தபால் மூலமும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது பற்றிய முழு தகவலை பெற http://tnhealth.tn.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

இனி போலீசாருக்கு விடுமுறை இல்லை!! காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

திருத்தணியில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலம்!! தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!!