தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
133

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ம் தேதி ஆரம்பமானது இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது இதனால் தென் மாவட்டங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதனடிப்படையில், நேற்று 8:30 உடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர், காரைக்கால் மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது. திருவாரூரில் 8 சென்டி மீட்டரும், வேதாரண்யத்தில் 7 செண்டி மீட்டரும், தக்கலையில் 6 சென்டி மீட்டரும், நன்னிலத்தில் 5 சென்டி மீட்டரும், மழை பெய்திருக்கிறது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி, தென்காசி, ஆயக்குடி, தேனி, கடலூர், திருநெல்வேலி, ராதாபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, குலசேகரபட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் தலா நான்கு சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, நாகர்கோவில், சுருள கோடு, தஞ்சை, பேராவூரணி, கலியன் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடக்கமே அட்டகாசமாக இருக்கிறது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இந்த காலகட்டத்தில் 15 மீட்டர் மழை இயல்பாக கிடைக்க வேண்டும் ஆனால் 20 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 25 மீட்டர் மழை பெய்திருக்கிறது ஆனால் இயல்பான அளவு 14 சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது. குறைந்தபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை இயல்பான அளவாக இருக்கிறது இருந்தாலும் அங்கே இருபத்தி நான்கு சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் 25 சென்டி மீட்டருக்கு பதிலாக 20 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் அணைகள், ஏரி, குளங்கள், உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் இரவு பகலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடிப்பதால் மழை மேலும் வலுவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிக்கையாளரை சந்தித்திருக்கிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடித்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு நோக்கி மெதுவாக நகரும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்று தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் ஆகவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, திருநெல்வேலி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதேசமயம் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டன. இதேபோல புதுச்சேரியில் கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஇன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!
Next articleஉச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!