நாவடக்கம் அவசியம்! பிரதமரை ஒருமையில் பேசிய எஸ்.ரா சற்குணம் கண்டித்த எல். முருகன்!

0
68

திமுகவின் அரசியல் தரகர் எஸ்ரா சர்குணம் அவர்கள் நாவடக்கம் துடன் இருக்கவேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் முருகன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

தேர்தல் நேரம் வந்துவிட்டாலே பணம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக பலருக்கு காசு வாங்கி தருவதற்காக, அரசியல் தரகராக செயல்பட்டு வரும் எஸ்.ரா. சற்குணம் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றார் .இது தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும் உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பிரதமர் மோடி அவர்களை உங்களைப் போன்ற குள்ளநரிகள் விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கின்றது. குடும்ப அரசியலிற்கு கைக்கூலியாக வேலை செய்து கொண்டு, கிடைக்கும் பலனை அனுபவித்துக்கொண்டு, தமிழக மக்களையும், தங்கள் மதம் சார்ந்த மக்களையும், ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு அது எவ்வளவு கீழ்த்தரமான பிழைப்பு என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்திருக்கின்றார்.

130 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் பாரதப்பிரதமர் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களை திருப்தி படுத்துவதற்காகவே பிரதமரை ஒருமையில் பேசி இருக்கிறீர்கள் .என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. அதேபோல இந்து மக்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், நீங்கள் பலமுறை இகழ்ந்து பேசி இருக்கிறீர்கள். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. வயது முதிர்ந்த நிலையில், மனிதருக்கு நிதானம் இருக்கும், அனுபவம் இருக்கும், அதோடு பொறுமையும் இருக்கும் இம்மூன்றையும் இழந்த எஸ்.ரா சற்குணம் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தெரிவித்தார் முருகன்.

தங்களை திருப்திப்படுத்துவதற்காக, எஸ்.ரா சற்குணம் போன்றவர்கள் இவ்வாறு தரம் தாழ்ந்து நடந்து கொள்வதை மேடையில் அமர்ந்து இருந்த அரசியல் கட்சி தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்பது வேதனை அளிக்கும் விஷயமாக இருந்து வருகின்றது. எஸ்.ரா சற்குணம் போன்ற அரசியல் தரகர்களின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுடைய மதம் சார்ந்த ஒருதலைப்பட்சமான விமர்சனங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .இவற்றிற்கெல்லாம் ஒன்று சேர்த்து மக்கள் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.