உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

0
88
#image_title

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!!

ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படக்கூடாது” என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் பெய்த கனமழையைக் கூட பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் 17 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து விட்டனர்.

மேலும் இந்த 17 ஆசிரியர்களுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இவர்களது இந்த கோரிக்கையானது நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரத போராட்டத்தையே நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleசசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??
Next article371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!!