குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை!
பெங்களூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மகன் எழுதிய கடிதம் மூலமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்தவர் சங்கர் என்ற நபர். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மற்றும் மகள்கள் சிந்து ராணி, சின்ஜனா மற்றும் மகன் மது சாகர் ஆகிய 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் சிந்து ராணியின் 9 மாத கைக்குழந்தையும் பசியால் அழுதே இறந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலைகளுக்கு எல்லாம் காரணம் தனது மனைவி பாரதி தான் என போலீசாரிடம் சங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷங்கரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது மகள் மற்றும் மகன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதங்கள் போலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கு தந்தையின் கள்ளத்தொடர்பே காரணம் என்றும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர். தனது பணத்தை காட்டி பலரை தொடர்பு வைத்து இருந்தார் என்றும் கூறி இருந்தார். இந்தக் கடிதங்கள் அந்த தற்கொலை வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மனைவி மற்றும் மகள்கள், மகன் சாவுக்கு ஷங்கரே காரணம் என்று அந்த கடிதங்களில் கூறப்பட்டிருந்தது. அதன் காரணமாக ஷங்கரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ஷங்கருக்கு போலீசார் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார்கள். அதைத்தொடர்ந்து நேற்று காலை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஷங்கர் ஆஜரானார்.
அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த தற்கொலை கடிதங்களில் எழுதி இருந்த கள்ளத் தொடர்பு குறித்தும் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் மனைவி, மகள்கள் மற்றும் மகனுக்கு ஏதேனும் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைகளுக்கு காரணம் சங்கர்தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஷங்கரின் மகள்களான சிந்து ராணி மற்றும் சின்ஜனா ஆகிய 2 பேரும் நான்கு பக்கங்களைக் கொண்ட தற்கொலை கடிதமும், மகன் 19 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மதுசாகர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தந்தையின் கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து விளக்கமாக எழுதி இருந்தார்.
அவரால் தனது தாய், சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து விரிவாக எழுதி வைத்திருந்தார். மேலும் தனது தந்தைக்கு ஐந்து பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும் எழுதியிருந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது. தந்தையின் கள்ளத்தொடர்புகள் விவகாரத்தினால் எனது தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கேட்டதால் தாயும், தந்தையும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு வந்தனர். எனது தாய்க்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தந்தை தொடர்ந்து தொல்லை கொடுத்தார். சகோதரிக்கும் இது போன்ற பல்வேறு தொல்லைகளை கொடுத்து இருந்தார்.
பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் தொல்லை கொடுத்து வந்ததன் காரணமாக நாங்கள் அனைவரும் தற்கொலை முடிவை எடுத்தோம் என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்தது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இது ஷங்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரையும் தற்கொலைக்கு தூண்டியதாக ஷங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஷங்கர் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, எனது மகன் என் மீது குற்றச்சாட்டுகள் எதுவுமே உண்மை இல்லை என்றும், அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்திருப்பது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
மேலும் என் மீது திட்டமிட்டு குற்றம் சுமத்துகின்றனர். போலீஸ் விசாரணையின் போது நான் அனைத்து விவரங்களையும் தெரிவித்து உள்ளேன். நான் 25 ஆண்டுக்கு முன்பாகவே பெங்களூருவில் இரண்டு மதுபான விடுதிகள் நடத்தியுள்ளேன். போலீசாரின் விசாரணையில் உண்மைகள் தெரிய வரட்டும் என கூறியுள்ளார்.