தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

0
134

விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு, நோய் தொற்று பாதிப்பு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது, புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சம் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி இருக்கின்ற நிலையில், போலியான வேலைவாய்ப்பு தற்சமயம் புதிதாக உருவெடுத்து இருக்கிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பிரதிகளை பயன்படுத்துவது, விண்ணப்பதாரர்களின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்படுவதும் என இதுவரையில் 18 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளது தெரியவந்திருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அதிகாரிகள் புகார் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

மோசடி செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பணம் அவர்களிடமே திரும்பி வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிவகை மேற்கொள்ள வேண்டும் இதுபோன்ற மோசடி பணியமர்த்தம் தமிழகத்தில் வேறு எங்காவது நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் இதில் நேரடியாக கவனம் செலுத்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வழங்கியிருக்கின்ற புகாரின் அடிப்படையில் இதனை தீவிர விசாரணை செய்து மோசடியில் ஈடுபடுபவர்களை சட்டப்படி தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணம் அவர்களுக்கு கிடைக்கவும், இதுபோன்ற புகார்கள் இனி வராத விதத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 ஊழியர்களுக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி!
Next articleஇவர்களுக்கு 5000 வழங்குக! மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!