குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

Photo of author

By Sakthi

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்திருக்கிறது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெறமுடியும் முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இது தற்சமயம் ஜூன் மாதம் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டிருக்கிறது. நீங்கள் இன்னமும் ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லையென்றால் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் அதனை செய்து விடுங்கள்.

அசல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகல், புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகல், உள்ளிட்டவற்றை கொண்டு இணையதளத்தில் இந்த ஆவணங்களை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு செல்ல வேண்டும், அதில் start now என்பதை கிளிக் செய்ய வேண்டும், பின்பு அதில் முகவரி,மாவட்டம், மாநிலம், உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும் அதனை சரியாக நிரப்ப வேண்டும்.

அதன் பின்னர் ration card benefit என்ற தேர்வை கிளிக் செய்து அதில் உங்களுடைய ஆதார் அட்டை எண், ரேஷன் அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண், உள்ளிட்டவற்றை நிரப்பவேண்டும். பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு OTP வரும் அந்த என்னை நிரப்பிய பிறகு ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இணைந்துவிடும்.