ராமதாஸ் அதிரடி: அன்புமணிக்கு பதிலாக மகள் காந்திமதி – பாமகவில் புதிய பிளவு!!

0
150
family politics continues in pmk.. is anbumanis removal a conspiracy by her sister?
family politics continues in pmk.. is anbumanis removal a conspiracy by her sister?

PMK: பாமக-வில் நடைபெற்ற பிரிவுகளின் புதிய திருப்பமாக, தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரின் மகள் காந்திமதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் பதவியில் அமரவைக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. திமுக-வை வாரிசு அரசியல் என்று விமர்சித்து வரும் வேலையில், பாமக-விலும் அந்த நிலையே தொடர்கிறது.

ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தி வந்தார். தொடர்ந்து அன்புமணியும் தலைமை வகித்து வந்தார். அதற்கு பிறகு ராமதாஸ்-யின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணியின் தலைவர் பதவி கொடுக்கப் பட்டது. இந்த வரிசையில் காந்திமதியும் இணையப் போவதாக கூறப்படுகிறது. இது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ராமதாஸ் பிரச்சாரத்திற்கு செல்லும் போது சில பிரச்சாரங்களில் காந்திமதியும் இருந்துள்ளார். இதன் காரணமாக சிலர் இதனை ராமதாஸ் திட்டமிட்டு தான் செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அன்புமணியின் பதவி பறிப்புக்கு பின்னால் காந்திமதியின் சதித்திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் பாமக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் செய்தியாக இது பார்க்கப்படுகிறது.

ஒருவேளை காந்திமதி பதவிக்கு வந்தால் அது “குடும்ப அரசியல்” என்ற வாதத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது கட்சியை பலப்படுத்துமா? இல்லை மேலும் பிளவை ஏற்படுத்துமா என்பதை வருங்கால அரசியல் தான் தீர்மானிக்க வேண்டும்.

Previous articleவிஜய்க்கு செல்லும் பா.ம.க வாக்குகள்.. முன்னிலையில் உள்ள த.வெ.க !
Next articleவிஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி.. பிரச்சாரத்துக்கு வந்த சிக்கல்!! தவெக வளர்ச்சியை நசுக்க திமுக நடத்தும் சதி!!