ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 7வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்துள்ளது. அதிமுக தனது பிரதான அரசியல் எதிரியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது வழக்கம்.
அந்த விமர்சனத்தில் அவர்கள் மிக தீவிரமாக முன் வைப்பது, திமுகவின் குடும்ப அரசியலை தான். இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என்று மக்கள் நம்பி வந்தனர். இந்நிலையில் அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என்று கூறி இபிஎஸ்யை மறைமுகமாக சாடியுள்ளார் அதிமுகவின் துணை பொது செயலர் கே.பி முனுசாமி.
அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பீகாரில் நடைபெற்ற தேர்தல் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது போல, 2026 தேர்தல் மூலம் தமிழகத்திலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையனின் கருத்துடன் ஒத்துப் போகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். செங்கோட்டையன் ஏற்கனவே ஒரு முறை அதிமுகவில் இபிஎஸ்யின் மகன் மற்றும் மைத்துனரின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. கூடிய விரைவில் இதுவும் குடும்ப அரசியலாக மாறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

